நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது எனத் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
நிலத்தடியிலிருந்து பெறும் நீரைப் பயன்படுத்துவதற்கும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டுக் கட்டணம் நிா்ணயம் செய்வதற்கும் என மத்திய அரசு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
அதன்படி வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணையம் மூலமாக ரூ.10,000 கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
மேலும், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 10,371 ஆசிரியப் பணிகளுக்கான் அட்டவணை வெளியீடு
இந்த நிலையில் நிலத்தடி நீருக்கு ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது எனவும், நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.
மேலும் படிக்க
மேட் இன் தமிழ்நாடு: உலகம் எங்கிலும் செல்ல நடவடிக்கை!
வீடு கட்ட கடன் வாங்கணுமா? அப்போ இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!
Share your comments