சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் சராசரியாக மிளகாய் 4000 எக்டர், வெங்காயம் 150 எக்டர் மற்றும் வாழைப்பயிர் 1200 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சல் குறையும் போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட PMFBY திட்டத்தின் மூலமாக பயிர் காப்பீடு செய்யப்படும் நிலையில் அதற்கான அறிவிப்பினை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தகவல்கள் பின்வருமாறு: இந்த ஆண்டு சம்பா (ராபி) 2023-24 பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் பயிருக்கு இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டாரங்களிலும் வெங்காய பயிருக்கு திருப்புவனம் வட்டாரத்திலும், வாழை பயிருக்கு சிவகங்கை, இளையான்குடி திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஆகிய வட்டாரங்களிலும் அறிவிக்கை செய்யப்பட்ட உள்வட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பயிர்:
மேலும் வாழை பயிருக்கு மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட மானாமதுரை, முத்தனேந்தல் செய்களத்தூர் ஆகிய உள்வட்டத்திற்கும், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட அ.திருவுடையார்புரம் உள்வட்டத்திற்கு, திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய உள்வட்டத்திற்கும், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சிவகங்கை, மதகுபட்டி, ஒக்கூர், தமறாக்கி, பெரியகோட்டை ஆகிய உள்வட்டத்திற்கும் ரூ.1,24,982 காப்பீட்டு தொகையும், ரூ.6,249.10 பிரீமியம் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிளகாய்- வெங்காயம் பிரிமீயம் தொகை:
மிளகாய் பயிருக்கு இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட அ.திருவுடையார்புரம், இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்களம் ஆகிய உள்வட்டத்திற்கும். காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட சிலுக்கப்பட்டி உள்வட்டத்திற்கும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட முத்தனேந்தல், மானாமதுரை ஆகிய உள்வட்டத்திற்கும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய உள்வட்டத்திற்கும், காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட சிலுக்கப்பட்டி உள்வட்டத்திற்கும் ரூ.62,615 காப்பீட்டு தொகையும், ரூ 62,615 பிரீமியம் தொகையும், வெங்காய பயிருக்கு திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கொந்தகை உள்வட்டத்திற்கும் ரூ.71,753.50 காப்பீட்டு தொகையும். ரூ. 3,587.70 பிரீமியம் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது இ-சேவை மையங்களின் மூலமாக பிரீமிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் அவ்வாறு செலுத்தும் போது, மேற்கண்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளதற்கான ஆதாரத்தையும் (அடங்கல் நகல்), ஆதார் நகலினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
ஆண்டுக்கு 1.18 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி RFOI விருதினை வென்றார் பெண் விவசாயி ஏ.வி.ரத்னம்மா
கடைசித் தேதி எப்போது?
நடப்பாண்டு சம்பா (ராபி) 2023-24 பருவத்தில் காப்பீடு செய்ய கடைசி தேதியாக மிளகாய் பயிருக்கு 31.01.2024-ஆம் தேதியும், வெங்காய பயிருக்கு 31.01.2024-ஆம் தேதியும் மற்றும் வாழை பயிருக்கு 29.02.2024-ஆம் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் விவரங்களை பெறுவதற்கு ஏதுவாக, தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரிலும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களை அலைபேசி எண்களில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாகவும், இளையான்குடி வட்டாரத்திற்கு எம்.பாண்டியராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநர் 94434 55755 என்ற எண்ணிலும், காளையார்கோவில் வட்டாரத்திற்கு எஸ்.வடிவேல், தோட்டக்கலை உதவி இயக்குநர் 85081 30960 என்ற எண்ணிலும், மானாமதுரை வட்டாரத்திற்கு தி.சுகன்யா, தோட்டக்கலை உதவி இயக்குநர் 82202 88448 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.
சிவகங்கை வட்டாரத்திற்கு தாரணி, தோட்டக்கலை அலுவலர் 63692 46510 என்ற எண்ணிலும் திருப்புவனம் வட்டாரத்திற்கு சர்மிளா, தோட்டக்கலை உதவி இயக்குநர் 97864 05852 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
விலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய தங்கம்- இன்றைய விலை நிலவரம்?
கொட்டும் மழையில் மிளகு- வாழை மரத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
Share your comments