1. வாழ்வும் நலமும்

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடவும். ஏன்?

Dinesh Kumar
Dinesh Kumar
Mangoes Soaked in water before Eating....

கோடையில் வெயில் சுட்டெரித்தாலும், இந்த சீசனில் வரும் பழங்கள், காய்கறிகள் நமக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக மாம்பழம் உள்ளது. தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே மாம்பழங்களை அதிகமாக வாங்கும், இந்த நேரத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது, சாப்பிடும் முன் மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு சாப்பிடுங்கள். ஏனென்றால், அவற்றைப் பழுக்க வைக்க பயன்படும் ரசாயனங்கள், நோயை உண்டாக்கும் கிருமிகள் போன்றவற்றையும் இதனால் நீக்கிவிடலாம். இதுமட்டுமின்றி, இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

ஃபைடிக் அமிலத்தைத் தவிர்க்கவும்: நம் உடலின் ஊட்டச்சத்தை குறைக்கும் ஃபைடிக் அமிலம் கூட ஆபத்தானது. இது உடலுக்கு தேவையான இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பல தாதுக்களை குறைக்கிறது. இதனால் உடலில் தாதுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. மாம்பழத்தில் ஃபைடிக் அமிலம் இருப்பதால், இது ஆபத்தானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு சில பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளில் காணப்படும் இயற்கையாக நிகழும் மூலக்கூறு ஆகும். இந்த பைடிக் அமிலம் உடல் சூடு அதிகரிக்க மற்றொரு காரணமாகும். எனவே தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இந்த பைடிக் அமிலம் வெளியேறும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆகையால் மக்கள் அனைவரும் இதை பின்பற்றுங்கள்.

நோய்களைத் தவிர்க்கவும்: உடல் சூடு, தலைவலி, வயிற்று வலி, செரிமானப் பிரச்சனைகள், தலைவலி, குடல் அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், இந்த முறை உதவுகிறது. இதனால் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைத் தவிர்த்து நம்முடைய உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.

இரசாயன அழிவு: இந்த முறை பயிர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்குகிறது. இது உணவு ஒவ்வாமை, சுவாசக் குழாய் எரிச்சல், வயிற்று உபாதைகள், அதிக நச்சுப் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தோல் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளைத் முற்றிலும் தவிர்க்கிறது.

குளிர்ச்சி: அதாவது, மாம்பழங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் தெர்மோஜெனீசிஸ் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே அவற்றை தண்ணீரில் ஊறவைக்கும் போது அந்த குணங்கள் குறைந்துவிடும்.

கொழுப்பைக் கட்டுப்படுத்தும்: மாம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் என்ற பண்பு அதிகம். இது கொழுப்பை அதிகரிக்கிறது. எனவே மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பது அதன் செறிவைக் குறைத்து இயற்கையான கொழுப்பை நீக்கும். ஆகையால் மக்கள் அனைவரும் இதை பின்பற்றினால் மாமாம்பழத்தினால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க:

சர்க்கரை நோயை நினைத்து கவலையா? இதோ உங்களுக்கான சிறப்பான தீர்வு பன்னீர் பூ!

வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை

English Summary: Mangoes should be soaked in water before eating: Do you know why? Published on: 05 May 2022, 11:43 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.