எப்போதுமே வெங்காயம் அதனை உறிப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை, இல்லத்தரசிகளையும், நடுத்தர வாசிகளையும் கண்ணீர் விட வைத்துள்ளது.
ஆனால் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது, அதனை விலையைப் பற்றி அல்ல, வெங்காயத்தால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி.
வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
உடல் எடை குறைய (Weight Loss)
நாம் பொதுவாகவே கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதால், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது. இதனைத் தடுக்க வெங்கயாத்தையும் உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம். வெங்காயத்தை தயிருடன் சேர்த்து ரைதா அல்லது சாலட் மாதிரி செய்து பச்சையாக (வேகவைக்காமல்) சாப்பிட்டால் உடல்எடை படிப்படியாகக் குறையும்.
தூக்கமின்மையைப் போக்கும் (Sleeping Problems)
மேற்கத்திய கலாச்சாரத்தில், வெங்காய சூப் மிகவும் பிரபலம். இதனை இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பதால், தூக்கமின்மை பிரச்னை தீரும். ஆழ்ந்த உறக்கத்தையும் தருகின்றது. வெங்காயத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் (phytochemicals) தூக்கமின்மையைத் தீர்க்க வல்லது.
இதய ஆரோக்கியம் (Heart Health)
வெங்காயத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயத்தில் உள்ள ஏன்டி ஆக்ஸிடன்ட்கள் antioxidant இதய ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.
கலோரி குறைவு (Low Calories)
காய்கறிகளில் குறைந்த அளவிலான கலோரி கொண்டது வெங்காயம். இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.
சரும பராமரிப்பு (Skin Care)
தோல் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வெங்காயம். தோலில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை நீக்கி தோலை பொலிவுடன் வைத்துக்கொள்ள வெங்காயம் உதவுகிறது.
சருமப் பிரச்னைகளுக்கு எதிராகக் போராடி நல்ல பலனைத் தரும் காய்கறிகளில் வெங்காயம் மிக முக்கியமானது.
நோய்எதிர்ப்பு சக்தி (Immunity)
வெங்காயத்தில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கச் செய்கிறது.
பற்களுக்கு பலம் (Teeth Health)
வெங்காயம் பற்களின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவும். மேலும், கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய உறவை வலுப்படுத்தவும் செய்கிறது.
விஷமாக மாறும்
வெங்காயத்தை வெட்டி ஸ்பிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், வெங்காயம் விஷமாக மாறிவிடும். எனவே விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!
PMKSY : ஒரு துளியில் அதிக மகசூல் திட்டத்திற்கு ரூ.400 கோடி - டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments