Krishi Jagran Tamil
Menu Close Menu

கரும்பு பயிரைத் தாக்கும் (கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா): மேலாண்மை முறைகள்

Tuesday, 13 August 2019 03:38 PM

கரும்பைத் தாக்கும் பூச்சிகளுள் வேர்புழு மிக முக்கியமானது. இது ஒரு வருடகால வாழக்கைச் சுழற்சியைக் கொண்டது. இதற்கு முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு பருவநிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் புழுப்பருவம் மட்டுமே பயிறைத் தாகக்கூடியது.

பூச்சியின் விபரம்

முட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது.  இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும்.

புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C)  எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.  கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும்.

கூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும்.  மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது.

வண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும்.

yellow pok

புழு தாக்கும் காலங்கள்

*  ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை

புழு தாக்குதலின் முதல் நிலை அறிகுறி

* முதல் கோடை மழைக்குப் பிறகு வண்டுகள் வெளிவருதல்

தாக்குதலின் அறிகுறிகள்

* கரும்பின் இலைகள் மஞ்சள் நிறமாக மற்றும்  

* தீவிர தாக்குதலினால் தூரில் உள்ள அனைத்து பயிர்களும் காய்ந்து விடும்.    

* வேர்ப்பகுதி முழுவதுமாக உண்ணப்பட்டிருக்கும் 

* நிலத்தடி தண்டுப்பகுதியில் குழி போன்ற ஓட்டைகள் காணப்படும் 

* பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்

* பாதிக்கப்பட்ட கரும்புகள்  வேரற்று கீழே சாய்ந்து விடும்

damaged sugarcane root

மேலாண்மை முறைகள்

* முதல் கோடை மழைக்குப் பிறகு வெளிவரும் வண்டுகளை ஒரு வாரத்திற்கு, தொடர்ந்து வேப்பமரம் மற்றும் பெருமரங்களிலிருந்து சேகரித்தல் அழித்தல் நல்லது.

* வண்டுகள் வரக்கூடிய மரங்களில் பூச்சி மருந்துகளை தெளித்தல்

* ஆழமான உழவின் மூலம் நிலத்திற்கடியில் உள்ள கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை வெளிக் கொண்டு வந்து இரையாக்குதல்.

* தாக்கப்பட்ட வயல்களில் நீரைத் தேக்கி நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்து புழுக்களை அழித்தல்.

white grub

*  ஜூன் - ஜூலை மாதங்களில் பிவேரியா ப்ராங்னியார்டி எனும் பூச்சிக்கொல்லி பூஞ்சாளத்தை ஏக்கருக்கு 1012 ஸ்போர்கள் எனும் வீதத்தில்  நிலத்தில் இட்டு பிறகு நீர் பாய்ச்சுதல்

    மண்ணில் இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் இப்பூஞ்சாளம் மூலம் போதியளவு மேலாண்மையை பெறுவதற்கும், மேற்கூறப்பட்ட பரிந்துறையின் படி தொடர்ந்து வரக்கூடிய வருடங்களிலும்  மண்ணில் இட்டு வரலாம்.

* வண்டுகள் வெளிவரும் மே- ஜூன் மாதங்களில் பூச்சிக்கொல்லி நூற்புழுக்களை (EPN) ஏக்கருக்கு 2.5 × 109 குஞ்சுகள் வீதம் தாக்கப்பட்ட வயல்களில் இட்டு பாதுகாப்பை பெறலாம்.

* ஜூன்- ஜூலை மாதங்களில், தேவைப்படும் பொழுது போரேட் குருணை  மருந்தினை ஹெக்டேருக்கு 2.5. ஏ. ஐ எனும் வீதத்தில் வயல்களில் இடலாம்.        

K.Sakthipriya
Krishi Jagran  

White Grub control and prevention Grub symptoms Crop protection Crop protection in sugarcane Pest of Sugarcane

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு
  2. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
  3. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்
  4. விற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்
  5. எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
  6. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி
  7. கரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்
  8. வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
  9. 3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு
  10. கரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.