தமிழகத்தில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த பள்ளி வாசல்களைப் புணரமைத்துப் புதுப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு 6 கோடி ரூபாயும் இந்த ஆண்டு 7கோடி ரூபாயும் வரும் ஆண்டுகளுக்கு முதலமைச்சர்களின் அனுமதி பெற்று கூடுதலாக நிதி வழங்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: அதிக மகசூல் தரும் பாலைவனப் பயிரான பேரீச்சை வளர்ப்பு!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று காலையில் சிறப்பு தொழுகை செய்தனர். செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து அவர்கள் ஊர்வலமாகச் செஞ்சி கூட்ரோட்டிற்கு வருகை தந்தனர். அங்கு செஞ்சி தாலுக்கா பள்ளிவாசல் ஜமாத்தலைவர் சையத் மஜித் பாபு பிறை கொடி ஏற்றி வைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க: TNEB: ஆகஸ்டுக்குள் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
தொடர்ந்து ஊர்வலமாகத் திருவண்ணாமலை சாலை வழியாகச் செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியை அடைந்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்த அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சார்பாகப் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிறுபான்மையர் நலத்துறை சார்பில் பழமை வாய்ந்த அனைத்து பள்ளி வாசல்களையும் புணரமைத்துப் புதுப்பிக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு 6கோடி ரூபாயும் இந்த ஆண்டு 7 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?
இனி வருகின்ற ஆண்டுகளுக்கு கூடுதலாக நிதி வழங்குவதற்கு முதலமைச்சரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், கபஸ்தானங்கள் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
முஸ்லிம் உதவும் சங்கம், மற்றும் மகளிர் கிருத்துவ உதவி சங்கம் என இரண்டு சங்கங்களின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு அவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவினங்களுக்கும், தையல் மிஷின் கொடுப்பதற்கும், சிறு தொழில் செய்வதற்கும் சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் பங்களிப்பு வழங்கினால் அரசு சார்பில் இரண்டு லட்சம் மானியமாக வழங்கப்பட்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
Share your comments