தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அனைத்துக் காய்கறிகளின் விலைகளுமே உச்சம் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். விலை உயர்வினை கட்டுப்படுத்தும் வகையில் 300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மேலும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில், நடந்தது. இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. அதனைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், தற்போது தக்காளி சிறிய வெங்காயம் முதலான பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்க்களின் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களைக் கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேவைப்படின் தனியான தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதைக் கடுமையாகக் கண்காணித்து அதற்கு தகுந்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள் காய்கறி உட்பட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொள்முதல் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போன்று நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அழைப்பு
வடதமிழகத்துக்கு குறி- 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Share your comments