தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற அரசு விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எத்தனை காலி இடங்கள் உள்ளன? தகுதிகள் என்னென்ன? சம்பளம் எவ்வளவு? முதலான விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
தகுதிகள்
- தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு என்று பார்க்கும்போது 18 முதல் 34 உடையவராக இருக்க வேண்டும்.
செயல்முறை
- விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்து கொடுத்தல் வேண்டும்.
- விண்ணப்பத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
- விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்து தருமபுரி மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வருகின்ற 25.07.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.
- காலத்தாமதமாகச் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது.
பணிகளின் விவரம்
- பணி: பகுதி நேரத் தூய்மைப் பணியாளர்
- தொகுப்பூதியம்: ரூ. 3000
- இந்த பகுதி நேரத் தூய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலமும், இன சுழற்சி மூலமும் நிரப்பப் பட இருக்கின்றது. எனவே, தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற விடுதிகளில் காலியாக இருக்கின்ற 4 பகுதி நேரத் தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக 12.05.2022 மற்றும் 13.05:2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் 11.07-2022 அன்று நடைபெற இருந்த நேர்காணல் ஆகியன தற்போது 2 பணியிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் அறிவுரையின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!
Share your comments