“சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் உச்சந்தலையை உயவூட்டுகிறது. மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இராசயனங்கள் நிறைந்த அழகு தயாரிப்புகளை விட, இயற்கையான முறையில் முடியை பராமரிப்பதே சரியான வழியாகும். ரோஸ்மேரி மற்றும் தைம் போன்ற மூலிகைகள் முடி பிரகாசத்தை மேம்படுத்துகின்றன என்று அழகு நிபுணர் ராஷ்மி ஷெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், முடிக்கு புத்துணர்வு வழங்கலாம். முடியை மென்மையாகவும், ஊட்டமளித்து, வலுவாகவும் வைக்க ஹேர் மாஸ்க் அவசியமாகும்.
முடியை ஷாம்பு செய்த பிறகு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தவும், இந்த ஹேர்மாஸ்க் இயற்கையான கண்டீஷனிங் வேலையை செய்யும். எனவே, ஷாம்பு செய்த பிறகு, துண்டை வைத்து உலர்த்தி, பின்னர் தலைமுடி முழுவதும் தாராளமாக இந்த மாஸ்க்-ஐ பயன்படுத்துங்கள், வேர் பகுதியில் இருந்து அரை முதல் ஒரு அங்குல முடியை விட்டு விடுங்கள்.. அப்ளை செய்து முடித்ததும் முடியை சீவுங்கள், சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். இவ்வாறு பல நன்மைகள் நிறைந்த, இந்த ஹேர்மாஸ்க் எப்படி செய்வது வாருங்கள் பார்ப்போம்.
சமையலறையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நீங்களே சொந்தமாக இந்த ஹேர் மாஸ்க் செய்திடலாம்! ஒவ்வொரு முடி வகைக்கும் ஹேர் மாஸ்க் இங்கே:
டிரை ஹேருக்கான செய்முறை:
1 பழுத்த அவகேடோ ½ கப்
தேங்காய் கிரீம் 3-4 தேக்கரண்டி
கற்றாழை சாறு 4-5 தேக்கரண்டி
ஜோஜோபா எண்ணெய் அல்லது வீட் ஜெர்ம் எண்ணெய்
அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு, பின் கழுவ வேண்டும்.
எண்ணெய் பசையுள்ள கூந்தலுக்கான செய்முறை:
ஆப்பிள் சைடர் வினிகர்
1 கப் தயிர்
2 எலுமிச்சை தோல்
2 தேக்கரண்டி மிளகுக்கீரை
2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய்
அனைத்தையும் ஒன்றாக கலந்து, நன்கு மசாஜ் செய்து 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் கழுவ வேண்டும்.
நார்மல் ஹேருக்கான செய்முறை:
½ கப் பால்
2 டீஸ்பூன் தேன்
5-6 சொட்டு சந்தன எண்ணெய்
மூன்றையும் ஒன்றாக கலந்து, தலைமுடியில் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு, பின் கழுவ நல்ல தீர்வு கிடைக்கும்.
செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும் அறிந்திடுங்கள்:
வெதுவெதுப்பான நீரில் தலைமுடியைக் கழுவுங்கள், ஏனெனில் வெந்நீர் முடிக்கு நல்லது.
– உங்கள் தலைமுடியை இயற்கையாக உலர வைப்பது நல்லது, ஈரமான முடியுடன் வெளியே செல்ல வேண்டாம். இது முடி உடைவதற்கு காரணமாகும்.
– வழக்கமான எண்ணெய் மசாஜ் செய்து வருவது நல்லது.
– ப்ளோ ட்ரையர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது சிறப்பு.
உங்கள் தலைமுடியை, அனைத்து வானிலையில் இருந்தும் பாதுகாக்க ஒரு ஸ்கார்ஃப் அல்லது தொப்பியை அணிந்துக்கொள்வது, நல்ல அலோசனையாகும்.
மேலும் படிக்க:
பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் பெருமிதம்
TNPSC 2022: அலுவலர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!
Share your comments