தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்து இருக்கக் கூடிய வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டரிடம் அனுமதியைப் பெற்று அதனை எடுத்துக் கொள்ள வழிச் செய்யப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து இதர பிற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகச் சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிக்கத்தக்கது.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
நன்செய் நிலங்களின் மேம்பாட்டுக்காக ஹேக்டருக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புன்செய் நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹேக்டருக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்று இலவசமாக மண்ணை எடுத்துக் கொள்ளலாம் எனவும், 20 நாட்களுக்கு மிகாமல் ஏரி குளங்களில் இருந்து நிர்ணயித்தளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!
Share your comments