1. வாழ்வும் நலமும்

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் எளிய பயிற்சிகள்!

Dinesh Kumar
Dinesh Kumar

Some simple exercises to help you grow the Height....

குழந்தைகளின் சரியான வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, குறிப்பாக வளரும் ஆண்டுகளில், அவர்களின் உயரம் மற்றும் எடை முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக இருப்பதால் ஒரு சில குழந்தைகள் உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் மிக உயர்ந்த வளர்ச்சியைக் காட்டுவார்கள்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உயரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். சரியான உணவு, ஊட்டச்சத்து மற்றும் போதுமான உடல் செயல்பாடு ஆகியவை உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிப்பதில் முக்கியமானவை என்றாலும், மரபணுக்களும் பங்கு வகிக்கின்றன.

குழந்தையின் உயரத்தைப் பற்றி கவலைப்படும் பெற்றோரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர பின்வரும் பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்: உயரத்தை அதிகரிக்க ஸ்ட்ரெச்சிங் ஒரு சிறந்த வழியாகும். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் மூட்டுகள் மற்றும் தசைநார்கள் தளர்த்த உதவும். இது எலும்புகள் வளரவும், வலிமையையும் தருகிறது. உயர்த்தை மேம்படுத்த டோ-டச்சிங் பயிற்சிகள் சிறந்தவையாகும்.

தொங்கும் பயிற்சிகள்: தொங்கும் பயிற்சிகள் உயரத்திற்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். எளிய தொங்கு பயிற்சிகள், உங்கள் குழந்தையின் உடலை நீட்டவும், அவர்களின் முதுகெலும்பை நீட்டவும் மற்றும் தசை வலிமையை வளர்க்கவும் உதவும். இது உடலை டோனிங் செய்து வடிவமைக்க உதவுகிறது.

யோகா போஸ்கள்: யோகா போஸ்கள் குழந்தைகளுக்கு உடல் உயரத்தை அதிகரிக்க மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. கோப்ரா போஸ் அல்லது கவ் போஸ் போன்ற எளிய யோகா போஸ்களை குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். இவை தவிர சூரிய நமஸ்காரம், சக்ராசனம் போன்ற யோகாசனங்களும் குழந்தைகள் உயரமாக வளர உதவுகிறது.

கால் தொடுதல்: கால் தொடுதல் என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும், இது முழு உடலையும் முதுகெலும்பையும் நீட்டி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. குழந்தைகள் இதை எளிதாக செய்யலாம்.

ஸ்கிப்பிங்: ஸ்கிப்பிங் என்பது அனைவரும் ரசிக்கும் ஒரு வேடிக்கையான உடற்பயிற்சியாகும். மேலும் இந்த உடற்பயிற்சி உயரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

ஜம்பிங் மற்றும் ஸ்கிப்பிங் விளையாடுவது குழந்தைகளின் தலை முதல் பாதம் வரை உள்ள செல்களைத் தூண்டுகிறது. குழந்தைகளின் சீரான உடல் வளர்ச்சிக்கும் உயரம் அதிகரிப்பதற்கும் ஸ்கிப்பிங் சிறந்ததாகும்.

விளையாட்டு நடவடிக்கைகள்: கூடைப்பந்து, பூப்பந்து, டென்னிஸ் மற்றும் கைப்பந்து போன்ற சில விளையாட்டு நடவடிக்கைகள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது அதுமட்டுமின்றி குழந்தையின் உயரத்தை வளர்க்கவும் உதவுகிறது. வளரும் பருவத்தில் இந்த விளையாட்டுகளை, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தவிர்த்தல்: பல உடற்பயிற்சிகள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் என்றாலும் எடைப் பயிற்சியில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். ஏனெனில் அது அவர்களின் இயற்கையான வளர்ச்சியில் தடுக்க வாய்ப்பு உள்ளது.

உணவு மற்றும் தூக்கம்: உங்கள் குழந்தை நன்றாக தூங்குவதையும் நன்றாக சாப்பிடுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் போதுமான உணவு மற்றும் தூக்கம் மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

தனிமையில் தவிக்கும் குழந்தைகள் - லாக்டவுன் ஐடியாக்கள்!!

Update: ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை சேர்ப்பது எப்படி?

English Summary: Worried about your baby's height? Here are some simple exercises to help you grow faster!

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.