தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்றன. இவற்றில் 2-ம் தவணை, பூஸ்டர் (ஊக்கத்தவணை) தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது என்பது யாவரும் அறிந்த ஒன்று ஆகும். தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
குறிப்பாக, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த மே 8-ந்தேதி கடந்த ஜூன் 12-ந்தேதி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
இந்த நிலையில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் தற்போது ஒரு லட்சம் இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்றன. இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியபோது, நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினர்.
மேலும் படிக்க: TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அதோடு, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறித்த காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எனச் சுமார் 1.45 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு என்று தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட உள்ளதால், அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது எனக் கூறியுள்ளனர் எனவே, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளதாகக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!
Share your comments